/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.சி., கட்சி மது ஒழிப்பு மாநாடு மகளிர் திரளாக பங்கேற்க அழைப்பு
/
வி.சி., கட்சி மது ஒழிப்பு மாநாடு மகளிர் திரளாக பங்கேற்க அழைப்பு
வி.சி., கட்சி மது ஒழிப்பு மாநாடு மகளிர் திரளாக பங்கேற்க அழைப்பு
வி.சி., கட்சி மது ஒழிப்பு மாநாடு மகளிர் திரளாக பங்கேற்க அழைப்பு
ADDED : அக் 01, 2024 06:49 AM

கடலுார்: உளுந்துார்பேட்டையில் நாளை நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு, மகளிர் திரளாக பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வி.சி., கட்சியின் கடலுார், கள்ளக்குறிச்சி மண்டல துணை செயலாளர் பரசு முருகையன் விடுத்துள்ள அறிக்கை:
மதுவிலக்கை தேசியக் கொள்கையாக மத்திய அரசு அறிவிக்க கோரியும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முன வரும் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பை ஈடு செய்ய சிறப்பு நிதி வழங்கவும், போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும், மதுக்கடைகளை முற்றிலுமாக மூடுவதற்கான கால அட்டவணையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். போதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, உளுந்துார்பட்டையில் நாளை (2ம் தேதி) மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தப்படுகிறது.
வி.சி., கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்கிறார்.
மாநாட்டிற்கு, மதுவை ஒழிப்போம் மனித வளம் காப்போம் என்ற முழக்கத்தோடு மகளிர் திரளாக பங்கேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.