ADDED : ஏப் 09, 2026 10:08 PM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி சட்டசபை தொகுதியில், தி.மு.க.கூட்டணியின் வி.சி., கட்சி வேட்பாளர் அப்துல்ரஹ்மான் ஓட்டு சேகரித்தார்.
நேற்று பண்ருட்டி வடக்கு ஒன்றிய பகுதியான எல்.என்.புரம், பூங்குணம்,சூரக்குப்பம், அங்குசெட்டிப்பாளையம் , கட்டியாம்பாளையம், மணப்பாக்கம், கொக்குப்பாளையம் உள்ளிட்ட, 30 கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.
அவருடன் மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் தணிகைசெல்வம் , வி.சி., கட்சி மாவட்ட செயலாளர் அருள்செல்வம் , தி.மு.க., ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், தொகுதி பொறுப்பாளர் வெங்கடசாமி , ஒன்றிய கவுன்சிலர் செல்வம், வி.சி., கட்சி மகளிர் அணி தெய்வ சங்கீதா, தே.மு.தி.க, கலியபெருமாள், மா.கம்யூ உத்திராபதி, ம.தி.மு.க., ஜெய்சங்கர், மாவட்ட மாணவரணி தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
