ADDED : ஏப் 15, 2026 10:49 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டியில், வி.சி. கட்சி வேட்பாளர் பொதுமக்களிடம் ஒட்டு சேகரித்தார்.
பண்ருட்டி நகராட்சி களத்துமேடு பகுதியில் இருந்து வி.சி., கட்சி வேட்பாளர் அப்துல்ரஹ்மான் பானை சின்னத்திற்கு ஒட்டு கேட்டு பிரசாரத்தை துவங்கினார்.
இதில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், மாவட்ட தி.மு.க., துணை செயலாளர்கள் ஆனந்திசரவணன், தணிகைசெல்வம், வி.சி., கட்சி மாவட்ட செயலாளர் அருள்செல்வம், நகர நிர்வாகிகள் கிருஷ்ணராஜ், பகலவன், கார்த்திக், தி.மு.க., அவை தலைவர் ராஜா, துணை செயலாளர்கள் சீனுவாசன் , சசிகுமார், காங்., நகர தலைவர் முருகன், தே.மு.தி.க., நகர செயலாளர் சேகர், மா.கம்யூ உத்திராபதி, இ.கம்யூ சக்திவேல், குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
