ADDED : ஆக 06, 2025 08:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலய வளாகத்தில் உள்ள மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் காலை உணவு வழங்கப்பட்டது.
வி.சி., தலைவர் திருமாவளவன் எம்.பி., சகோதரி பானுமதியின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடந்த இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமை தாங்கி, அன்னதானம் வழங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி, நகர செயலாளர் முருகன், தொகுதி பொறுப்பாளர் வைத்திலங்கம், துணை செயலாளர் பாஸ்கர், ஒன்றிய பொருப்பாளர் அய்யாதுரை முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய பொருப்பாளர்கள் கண்ணன், வீரதமிழன், அகத்தியன் பாலா, மாணவரணி ராகுல், அய்யம்பெருமாள், மூர்த்தி, வெங்கடேசன் உட்பட பலர் பங் கேற்றனர்.
ஒன்றிய பொருளாளர் சக்திவேல் நன்றி கூறினார்.