கட்சி பொறுப்பு வழங்காததை கண்டித்து வி.சி.,வினர் ஆர்ப்பாட்டம்
கட்சி பொறுப்பு வழங்காததை கண்டித்து வி.சி.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 30, 2026 07:00 PM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: வி.சி.கட்சியில் பொறுப்பு வழங்காததை கண்டித்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லிக்குப்பம் அடுத்த பாலுார் சேர்ந்தவர் மணிவேந்தன். வி.சி.கட்சியில், அச்சு ஊடக மைய பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர். இவர், ஒன்றிய செயலாளர் பதவியை பெற முயற்சித்து வந்தார். புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் திருமாவளவன் நியமித்தார். அதில் மணிவேந்தனுக்கு ஒன்றிய செயலாளர் பதவி கிடைக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மணிவேந்தன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேல்பட்டாம்பாக்கம் அம்பேத்கர் சிலை முன் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் கரிகாலன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை ஏற்று கலைந்து சென்றனர்.
