/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீராணம் ஏரி முழு கொள்ளவை எட்டியது; பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு! சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு 74 கன அடி திறப்பு

ADDED : ஜூன் 04, 2025 09:33 PM

சேத்தியாத்தோப்பு; வீராணம் ஏரி முழுகொள்ளவு நிரம்பியதையொட்டி சிதம்பரம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் துவங்கி லால்பேட்டை வரை 14 கிலோ மீட்டர் நீளமும், 5 கிலோ மீட்டர் அகல பரப்பளவு கொண்டுள்ளது. வீராணம் ஏரியில் மழைகாலங்களில் 47.50 அடி (1465 ) மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு 55 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் காவிரி டெல்டா கடைமடை பகுதி பாசனம் பெறுகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பரவலாக பெய்த கனமழையால் நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்தும், அணைக்கரை வடவாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வீராணம் ஏரிக்கு வந்தடைந்து.
ஏரியில் தற்போது முழுகொள்ளளவு 47.50 அடி தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் சென்னைக்கு மெட்ரோ நிறுவனம் பம்ப் செய்து வினாடிக்கு 74 கன அடி அனுப்பி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு கோடையில் ஏரி முழுகொள்ளளவு தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வீராணம் ஏரி நிரம்பி முழுகொள்ளளவு எட்டியதை தொடர்ந்து சிதம்பரம் பொதுப்பணித்துறை நீர்வளத்துறை செயற்பொறியாளர் வழிகாட்டுதலின்படி உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், சேத்தியாத்தோப்பு வெள்ளாறு பாசனப்பிரிவு உதவி பொறியாளர் படைகாத்தான் ஆகியோர் ஏரியை ஆய்வு செய்தனர்.
வீராணம் ஏரி ராதா மதகுகினை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசன வாய்க்கால்கள் மற்றும் பூதங்குடி வீ.என்.எஸ்., மதகினையும் ஆய்வு செய்தனர்.