/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணி துவக்கம்
/
வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணி துவக்கம்
ADDED : ஜூலை 12, 2025 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் துவக்க விழா நடந்தது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் 3 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனையொட்டி கோவிலில் நடந்த விழாவில், நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், குத்துவிளக்கேற்றினார்.
விழாவில், கோவில் செயல் அலுவலர் ராஜ்குமார், கோவில் ஆய்வாளர் ஸ்ரீதேவி, தொழிலதிபர்கள் வைரக்கண்ணு, மோகனகிருஷ்ணன், கவுன்சிலர்கள் ராமலிங்கம், கிருஷ்ணராஜ், கதிர்காமன், சண்முகவள்ளி பழனி, நகர காங்., தலைவர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.