sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பயன்பாட்டிற்கு வருகிறது காய்கறி மார்க்கெட்

/

 பயன்பாட்டிற்கு வருகிறது காய்கறி மார்க்கெட்

 பயன்பாட்டிற்கு வருகிறது காய்கறி மார்க்கெட்

 பயன்பாட்டிற்கு வருகிறது காய்கறி மார்க்கெட்


ADDED : ஜன 11, 2026 06:31 AM

Google News

ADDED : ஜன 11, 2026 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில், ரூ.5.70 கோடியில் கட்டப்பட்ட காய்கறி மார்க்கெட் நாளை பயன்பாட்டிற்கு வருகிறது.

சிதம்பரம், மேலவீதியில், பல்லாண்டு காலமாக காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக, மார்க்கெட்டை இடம் மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

வடக்கு மெயின் ரோட்டில் உள்ள அண்ணா கலையரங்க இடத்தில், மார்க்கெட் அமைக்க முடிவு செய்து ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதில், 97 திறந்தவெளி கடைகள், 28 ஷட்டருடன் கூடிய கடைகள், பெண்கள் மற்றும் ஆண் தொழிலாளர்களுக்கு தனித்தனி ஓய்வறைகளுடன் காய்கறி மார்க்கெட் பணிகள் துவங்கி நடந்து வந்தது. அதன் பின், மீண்டும் 70 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் காய்கறி மார்க்கெட் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வில், நகராட்சி சேர்மன் செந்தில்குமார், சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் மல்லிகா, இன்ஜினியர் சுரேஷ், கவுன்சிலர்கள் ரமேஷ், ஜேம்ஸ் விஜயராகவன், அப்புசந்திரசேகரன், வெங்கடேசன், மணிகண்டன், சுதாகர், லதா, சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காய்கறி மார்க்கெட் திறப்பு விழா நாளை நடக்கிறது.






      Dinamalar
      Follow us