/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காய்கனி வியாபாரிகள் சங்க ஆண்டு விழா
/
காய்கனி வியாபாரிகள் சங்க ஆண்டு விழா
ADDED : ஜூலை 29, 2025 10:07 PM

மந்தாரக்குப்பம்; நெய்வேலியில் காய்கனி வியாபாரிகள் சங்கத்தின் 50வது ஆண்டு பொன் விழா நடந்தது.
சங்க தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், பொருளாளர் சக்திவேல், துணைத் தலைவர் மனோகரன், துணை செயலாளர் பஞ்சமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காப்பாளர் கருப்பையா வரவேற்றார்.
எஸ்.பி., ஜெயக்குமார் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து பேசினார். வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுச் செயலாளர் மெஸ்பர்காந்தன் வெள்ளையன் சங்க உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
தலைமை நிலைய நிர்வாக செயலாளர் பாஸ்கரன், அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் சங்கர், பாபு, ரவிந்தீரன், ராஜாசிங், மாவட்ட தலைவர் பிரகாஷ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தங்கராசு, ரமேஷ், சத்தியகுமார், இளையபெருமாள், சங்கர், சின்னையன், சரவணன், அப்துல்ஜப்பார், மூர்த்தி, அக்கீம் பங்கேற்றனர்.
முன்னாள் செயலாளர் ரங்கராசன் நன்றி கூறினார்