/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்
/
சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்
ADDED : ஏப் 07, 2025 05:06 AM
சேத்தியாத்தோப்பு,: சேத்தியாத்தோப்பு பள்ளி அருகில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சேத்தியாத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளி செல்லும் சாலையில் தொடக்கப்பள்ளி, அரசு மாணவர்கள் விடுதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளன. சாலையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும்.
இந்நிலையில், சேத்தியாத்தோப்பு பஸ் ஸ்டாண்டில் இருந்து சாலை மேம்பாலம் வரை இருபுறங்களிலும் சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள், மினிடெம்போ உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அவசர மருத்துவ சேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் கர்பிணிகள், நோயாளிகள் குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை பெற முடியவில்லை. சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

