/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாநகராட்சியில் மழைநீர் அகற்ற வாகனங்கள் தயார்
/
கடலுார் மாநகராட்சியில் மழைநீர் அகற்ற வாகனங்கள் தயார்
கடலுார் மாநகராட்சியில் மழைநீர் அகற்ற வாகனங்கள் தயார்
கடலுார் மாநகராட்சியில் மழைநீர் அகற்ற வாகனங்கள் தயார்
ADDED : நவ 28, 2024 07:11 AM

கடலுார்: கடலுார் மாநகராட்சியில் மழைநீரை அகற்ற பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாநகராட்சியில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்து வருவதை அகற்றும் பணியில் அதிகாரிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மழைநீரை உடனடியாக அகற்றுவதற்கு தற்போது மோட்டார்கள் பொருத்திய டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இந்த வாகனங்கள் மூலம் மழைநீர் அதிக அளவில் தேங்கிய பகுதியில் எளிதாக தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.