/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் அசத்தல்
/
வேப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் அசத்தல்
வேப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் அசத்தல்
வேப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் அசத்தல்
ADDED : ஜன 02, 2025 06:38 AM

வேப்பூர்; வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளியை சேர்ந்த 425 மாணவர்கள், 14 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோருக்கான, மாவட்ட மற்றும் வட்ட அளவிலான கபடி, வாலிபால், கைப்பந்து, கால்பந்து உட்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். அதில், 265 மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
மேலும், வேப்பூர் குறுவட்ட அளவில் நடந்த தடகள போட்டிகளில், தொடர்ந்து 3 ஆண்டுகளாக வெற்றி பெற்றனர். அவர்களை ஊக்குவிக்க கேங்குவா அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடந்தது.
வேப்பூர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உதயக்குமார் தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார்.
கேங்குவா அறக்கட்டளை நிறுவனர் செந்தில்குமார், மாணவர்களை பாராட்டி, நினைவு பரிசு வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம், உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்குமார், ரவிக்குமார், கேங்குவா அறக்கட்டளை நிர்வாகி ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.