/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.இ.டி., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
வி.இ.டி., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 17, 2025 11:40 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் வி.இ.டி., மேல்நிலைப் பள்ளியின் 10ம் வகுப்பு மாணவர்கள், 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
விருத்தாசலம் வி.இ.டி., மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதிய 150 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர்.
மாணவிகள் திவ்யா 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதலிடம், மாணவிகள் மக அட்சயா, சுஜித்திரா 488மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் விக்னேஷ் 487 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
450க்கு மேல் 25 பேர், 400க்கு மேல் 73 பேர் மதிப்பெண் பெற்றனர். ஆங்கிலம் பாடத்தில் ஒரு மாணவர், கணித பாடத்தில் 3 பேர், அறிவியல் பாடத்தில் 12 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 2 பேர் என மொத்தம் 18 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
சாதனை மாணவர்களை கல்விக்குழுமத் தலைவர் பத்மாவதி சக்திவேல், செயலாளர் இந்திரா வீரராகவன், பொருளாளர் கீர்த்திகா ராஜகோபால், தலைமை ஆசிரியர் பிரபாகரன், உதவி தலைமை ஆசிரியர்கள் வாழ்த்தினர்.