/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கால்நடை மருந்தகத்திற்கு சொந்த கட்டடம் தேவை
/
கால்நடை மருந்தகத்திற்கு சொந்த கட்டடம் தேவை
ADDED : ஜன 07, 2025 12:14 AM
பெண்ணாடம்; கொத்தட்டை கால்நடை மருந்தகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை கிராம மக்கள் அதிகளவில் கால்நடைகளை வளர்க்கின்றனர். கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால், அதே பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்திற்கு ஓட்டிச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கால்நடை மருந்தகம் பழமையான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின், கீழ் பகுதியில் இயங்குகிறது. இங்கு போதிய இடவசதி இல்லாததால் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க கால்நடை ஆய்வாளர் சிரமம் அடைகின்றனர். மேலும், பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கீழ்பகுதியில் கால்நடை மருந்தகம் இயங்கி வருவதால் எந்நேரமும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, கொத்தட்டை கால்நடை மருந்தகத்திற்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.