/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கால்நடை மருத்துவமனை விவசாயிகள் கோரிக்கை
/
கால்நடை மருத்துவமனை விவசாயிகள் கோரிக்கை
ADDED : அக் 25, 2024 06:30 AM
சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுபாக்கம் ஊராட்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், போலீஸ் நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி, வேளாண் கூட்டுறவு வங்கி, எஸ்.பி.ஐ., வங்கி உள்ளதால், சுற்றுப்புற கிராம மக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.
இப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மூலம் கிடைக்கும் வருவாய் வாழ்வாதாரமாக உள்ளது.
இந்நிலையில், சிறுபாக்கத்தில் கால்நடை மருத்துவமனை இல்லாததால், கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் ஏற்படும் போது 6 கி.மீ., துாரத்தில் உள்ள மங்களூர் கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால், கால விரையம், கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. பேரிடர் காலங்களில் கால்நடை இறப்பு விகிதம் அதிகரிக்கிறது.
எனவே, சிறுபாக்கத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.