/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரங்கிப்பேட்டை பாபாஜி கோவிலுக்கு துணை ஜனாதிபதி இன்று வருகை
/
பரங்கிப்பேட்டை பாபாஜி கோவிலுக்கு துணை ஜனாதிபதி இன்று வருகை
பரங்கிப்பேட்டை பாபாஜி கோவிலுக்கு துணை ஜனாதிபதி இன்று வருகை
பரங்கிப்பேட்டை பாபாஜி கோவிலுக்கு துணை ஜனாதிபதி இன்று வருகை
ADDED : ஜன 29, 2024 04:51 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பாபாஜி கோவிலில் இன்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், தரிசனம் செய்கிறார்.
பரங்கிப்பேட்டை, ரேவ் மெயின்ரோடு சுங்க அலுவலம் அருகே பாபாஜி கோவில் உள்ளது. நடிகர் ரஜினிகாந்த நடித்த பாபா பட துவக்க விழாவின்போது, பாபாஜி சாமியின் படத்தை வைத்து வழிப்பட்டு துவக்கினார். அதன் பிறகு, பாபாஜி கோவில் பிரபலம் அடைந்து பொதுமக்கள் வர தொடங்கினர்.
இங்கு, பாபாஜியின் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாபாஜி கோவிலுக்கு இன்று (29ம் தேதி) துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கிறார்.
அதையொட்டி, சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டை வரை சாலையோரங்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டது, சேதமடைந்த சாலை பகுதிகள் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டது. சாலையில், குறுக்கே முக்கிய இடங்களில் இருந்த ஸ்பீடு பிரேக்கர்கள் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. பாபாஜி கோவில் பகுதியில் டில்லி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.