விஜயகாந்த் பிறந்தநாள் விழா இலவச கணினி பயிற்சி வகுப்பு
விஜயகாந்த் பிறந்தநாள் விழா இலவச கணினி பயிற்சி வகுப்பு
ADDED : ஆக 25, 2026 07:04 PM
விருத்தாசலம்: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, விருத்தாசலத்தில் தே.மு.தி.க., சார்பில், பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை, ஏ.எல்.சி., சர்ச்சில் சிறப்பு திருப்பலி, ஆலடி சாலையில் உள்ள நவாப் ஜாமி ஆ பள்ளிவாசலில் நடந்த சிறப்பு தொழுகை நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் பிரேமலதா எம்.எல்.ஏ., பங்கேற்றார்.
தொடர்ந்து, எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த இலவச கணினி பயிற்சி, தையல் பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
இதில், ராஜ்யசபா எம்.பி., சுதீஷ், மகன் விஜய பிரபாகரன், மாவட்ட செயலர் சிவக்கொழுந்து, மாவட்ட துணைச் செயலர் வேல்முருகன், நகர செயலர் ராஜ்குமார், மாநில செயற்குழ உறுப்பினர் ரமேஷ், நகர தலைவர் சங்கர், மாவட்ட பிரதிநிதி பாலா, நகர பொருளாளர் கருணா, நகர இளைஞரணி சக்கரபாணி, நகர துணை செயலர் இளங்கோவன் உட்பல பலர் பங்கேற்றனர்.
