ADDED : ஜன 23, 2024 05:58 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த வல்லியம் கிராமத்தில், தே.மு.தி.க., ஸ்ரீமுஷ்ணம் வடக்கு ஒன்றியம் சார்பில், விஜயகாந்த் படத்திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட துணை செயலாளர் ராஜவன்னியன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் நவநீதமுருகன் முன்னிலை வகித்தார். ஸ்ரீமுஷ்ணம் வடக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் விஜய உமாநாத், விஜயகாந்த் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மாவட்ட அவைத்தலைவர் பாலு, மாவட்ட துணை செயலாளர் பாலச்சந்தர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணராஜ், வீரமணி, வல்லியம் ஊராட்சி தலைவர் பாலகண்ணன், வட்டார தலைவர் பாஸ்கர், தி.மு.க., வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், தே.மு.தி.க., பொருளாளர் மதியழகன், ஒன்றிய துணை செயலாளர்கள் செந்தில், திருமாறன், மாவட்ட பிரிதிநிதி ராயர், ஜோதிராமலிங்கம், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரக்குமார், புவனகிரி ஒன்றிய செயலாளர் பாலு, ஸ்ரீ முஷ்ணம் பேரூர் செயலாளர் வெற்றிவேல்மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய துணைசெயலாளர் ராஜ் நன்றி கூறினார்.

