/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விஜயமாநகரம் சாலை: எம்.எல்.ஏ., ஆய்வு
/
விஜயமாநகரம் சாலை: எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : அக் 08, 2024 02:40 AM

விருத்தாசலம்: விஜயமாநகரத்தில் பழுதான சாலையை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரத்தில் என்.எல்.சி.,யால் மறு குடியமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள புது இளவரசம்பட்டு பகுதியில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. பல ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதால் பொது மக்கள் பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.
பொது மக்கள் புகாரின் பேரில், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நேற்று பழுதான சாலையை பார்வையிட்டார்.
அப்போது, கலெக்டரிடம் தெரிவித்து சிறப்பு நிதியில் சாலையை சீரமைத்து தருவதாக உறுதியளித்தார். தி.மு.க., மாவட்ட பிரதிநிதி பாலகிருஷ்ணன், காங்., நிர்வாகிகள் ராவணன், ரஞ்சித்குமார் உடனிருந்தனர்.