தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் முற்றுகை

 அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் முற்றுகை

 அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் முற்றுகை


ADDED : ஜூலை 21, 2026 03:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 03:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுபாக்கம்: அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி மங்களூர் ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி அடுத்த சிறுமுளை கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, கடந்த சில மாதங்களாக குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை.

இதனை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால், அதிருப்தி அடைந்த கிராம மக்கள் 20க்கும் மேற்பட்டோர், நேற்று பகல் 12:00 மணியளவில் மங்களூர் ஒன்றிய அலுவலகம் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த மங்களூர் பி.டி.ஓ., முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

அதனை தொடர்ந்து, பகல் 2:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us