/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.கே.டி., சாலையில் சுரங்கப்பாதை 3 கிராம மக்கள் கோரிக்கை
/
வி.கே.டி., சாலையில் சுரங்கப்பாதை 3 கிராம மக்கள் கோரிக்கை
வி.கே.டி., சாலையில் சுரங்கப்பாதை 3 கிராம மக்கள் கோரிக்கை
வி.கே.டி., சாலையில் சுரங்கப்பாதை 3 கிராம மக்கள் கோரிக்கை
ADDED : ஆக 05, 2025 01:49 AM

சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அருகே வி.கே.டி., பைபாசில் சுரங்கப்பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேத்தியாத்தோப்பு அடுத்த ஆணைவாரி, நல்லதண்ணீர்குளம், மணக்காடு ஆகிய கிராமங்களில், 2,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர், வியாபாரிகள், ஆணைவாரி, மேட்டுத்தெரு வழியாக வி.கே.டி., புதிய பைபாஸ் சாலையை கடந்து செல்கின்றனர்.
வி.கே.டி., சாலையில் அதிவேகமாக லாரிகள், கார்கள், டூரிஸ்ட் வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், சுரங்கப்பாதை அமைக்கக் கோரி கடந்த 2018ம் ஆண்டு சாலை அமைக்கும் பணியை தடுத்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
சுரங்கப்பாதை அமைத்து தருவதாக நகாய் அதிகாரிகள் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்த பகுதி முழுதும் விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி என்பதால் அதிகாலையில் விவசாய பணிகளுக்கு செல்வோர் பைபாஸ் சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, வி.கே.டி., சாலையில் ஆணைவாரி கிராமத்திற்கு செல்லும் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.