/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் மையம் திறக்க கிராம மக்கள் கோரிக்கை
/
குடிநீர் மையம் திறக்க கிராம மக்கள் கோரிக்கை
ADDED : செப் 13, 2025 09:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : கீழ்ச்செருவாய் கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தை திறக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் ஊராட்சியில் கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் அமைக்கப்பட்டது.
ஆனால், குடிநீர் மையம் இதுநாள் வரை கிராம மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பாழாவதுடன், அரசு நிதியும் வீணாகிறது.
எனவே, கிராம மக்கள் நலன்கருதி, காட்சிப்பொருளான குடிநீர் வழங்கும் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒன்றியக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.