/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அழகர் கோவில் பொம்மைகளை பாதுகாக்க கிராம மக்கள் மனு
/
அழகர் கோவில் பொம்மைகளை பாதுகாக்க கிராம மக்கள் மனு
ADDED : நவ 28, 2024 07:16 AM

கடலுார்: தென்னம்பாக்கம் அழகர் கோவிலில், வேண்டுதலின்பேரில், பொதுமக்கள் வைக்கும் பொம்மைகளை பாதுகாக்கக்கோரி, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
கடலுார் அடுத்த தென்னம்பாக்கத்தை சேர்ந்த குமார் தலைமையில் பொதுமக்கள் கொடுத்துள்ள மனு;
தென்னம்பாக்கம் அழகர் கோவிலில், பொதுமக்கள் வேண்டுதலின் செய்து வைக்கும் பொம்மைகள் அதிகமாக உள்ளதால், அவைகளை ஏலம் விடப்படும் என கூறப்பட்டது. குறிப்பிட்ட தொகை வராததினால், ஏலம் அதிகாரிகளால் நிறுத்தப்பட்டுள்ளது. மறு ஏல அறிவிப்பு கொடுக்கும் முன், பொம்மைகளுக்கு கேலரி வைத்து தரப்படும் என கூறினர். ஆனால், இதுவரை செய்யவில்லை. மேலும், பழைய பொம்மைகளையே எடுத்து வண்ணம் பூசி வைக்கும் நிலை உள்ளது. பொம்மை வைத்தவர்கள் தங்கள் பொம்மைகளை காணவில்லை என புகார் கொடுக்கின்றனர். மேலும், ஹிந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள், பொம்மைகளை ஏரியில் போட்டுள்ளனர். இப்பிரச்னைகளுக்கு காரணமான செயல் அலுவலர், கணக்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.