/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காலி குடங்களுடன் கிராம மக்கள் மனு
/
காலி குடங்களுடன் கிராம மக்கள் மனு
ADDED : மே 06, 2025 12:31 AM

கடலுார், ;கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் மக்கள் மனு அளித்தனர்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் புவனகிரி அடுத்த பூவாலை குளத்து மேட்டு தெரு பொதுமக்கள் அளித்த மனு:
பூவாலை கிராமத்தில் குளத்து மேட்டு தெருவில் குடிநீர் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், அருகில் உள்ள பகுதிக்கு நடந்து சென்றும், வாகனங்களில் சென்றும் குடிநீர் பிடித்து வருகிறோம்.
இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பூவாலை அரசுப்பள்ளி அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அது சுத்தமாக இல்லாமல் மஞ்சளாக உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.