/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கும்பாபிேஷக பந்தல்கால் கிராம மக்கள் எதிர்ப்பு
/
கும்பாபிேஷக பந்தல்கால் கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 21, 2025 10:03 PM
சேத்தியாத்தோப்பு; பரதுார் அகத்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷகத்திற்கான பந்தல்கால் நடும் பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
சேத்தியாத்தோப்பு அடுத்த பரதுார் கிராமத்தில் பழமையான அகத்தீஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணி மேற்கொள்ள ஹிந்து அறநிலையத் துறை சார்பில் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திருப்பணி முழுமையாக முடிவடைவதற்குள்ள கும்பாபிேஷகத்திற்கான தேதி செப்., 4ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் பந்தல்கால் நடும் பணி நடத்த வந்தனர்.
அப்போது, பந்தல்கால் நடும் பணியை தடுத்து புனரமைப்பு பணிகள் பெயரளவில் நடப்பதாக கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கும்பாபிேஷக செலவின தகவல் பலகை கோவில் வளாகத்தில் வெளிப்படையாக வைக்க வேண்டும்.
கும்பாபிேஷக கமிட்டி குழு, திருப்பணிக்குழு அமைக்க வேண்டும் என கூறி கோஷங்கள் எழுப்பி கலைந்து சென்றனர். தொடர்ந்து, அதிகாரிகள் பந்தல்கால் நடும் பணியை நடத்தி விட்டு சென்றனர்.