sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்; சாத்தியம் கிராம மக்கள் மறியல்

/

கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்; சாத்தியம் கிராம மக்கள் மறியல்

கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்; சாத்தியம் கிராம மக்கள் மறியல்

கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்; சாத்தியம் கிராம மக்கள் மறியல்


ADDED : டிச 19, 2024 06:45 AM

Google News

ADDED : டிச 19, 2024 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் அடுத்த சாத்தியம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒருவாரமாக கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை.

இதில், ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை 9:30 மணியளவில் விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார் மற்றும் வேப்பூர் தாசில்தார் மணிகண்டன் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில், காலை 10:00 மணியளவில் கிராம மக்கள் அனைவரும் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us