/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தரைப்பாலம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் கிராம மக்கள் போராட்டம்
/
தரைப்பாலம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் கிராம மக்கள் போராட்டம்
தரைப்பாலம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் கிராம மக்கள் போராட்டம்
தரைப்பாலம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் கிராம மக்கள் போராட்டம்
ADDED : டிச 01, 2025 06:08 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் பணியை மீண்டும் துவங்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அடுத்த சாத்தக்கூடல் கிராமத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில், சாத்துக்கூடல் - உச்சிமேடு இடையே செல்லும் கிராம இணைப்பு சாலையில் உள்ள ஓடையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த, 3 மாதங்களுக்கு முன் துவங்கியது.
ஆனால், தனிநபர் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழையினால், சாத்துக்கூடல் - உச்சிமேடு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, தரைப்பாலம் அமைக்கும் பணியை மீண்டும் துவங்க வேண்டும் என சாத்துக்கூடல் கிராம மக்கள் நேற்று முன்தினம் தரைப்பாலம் அமைக்கும் பகுதியில் நின்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.