sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

4 வழிச்சாலையில் மேம்பாலம் கோரி கடலுார் அருகே கிராம மக்கள் மறியல்

/

4 வழிச்சாலையில் மேம்பாலம் கோரி கடலுார் அருகே கிராம மக்கள் மறியல்

4 வழிச்சாலையில் மேம்பாலம் கோரி கடலுார் அருகே கிராம மக்கள் மறியல்

4 வழிச்சாலையில் மேம்பாலம் கோரி கடலுார் அருகே கிராம மக்கள் மறியல்


ADDED : செப் 22, 2024 02:21 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையிலான 4 வழிச்சாலையில், ராமாபுரம் அருகே மேம்பாலம் அமைக்கக்கோரி கிராம மக்கள்நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலை, கடலுார் அருகே ராமாபுரம் வழியாக சென்று சிதம்பரம் சாலையில் இணைகிறது. கிழக்கு ராமாபுரத்திற்கும்,வழிசோதனை பாளையத்திற்கும் இடையே இச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தங்கள் கிராமத்திற்கு செல்ல வசதியாக, நான்கு வழிச்சாலையில் ராமாபுரம்- வழிசோதனை பாளையம் கிராமத்திற்கு இடையே, சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மேம்பாலம் அமைக்கப்படாமல் சாலை பணி நடந்து வந்தது. அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் நேற்று காலை, 10:00 மணியளவில் விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கடலுார் தாசில்தார் பலராமன், திருப்பாதிரிப்புலியூர் போலிசார் விசாரணை நடத்தினர். தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் கலந்து பேசி ஆவண செய்வதாக உறுதியளித்ததன்பேரில் 11:00 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us