/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஐகோர்ட் செல்ல கிராம மக்கள் ரெடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பீதி
/
ஐகோர்ட் செல்ல கிராம மக்கள் ரெடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பீதி
ஐகோர்ட் செல்ல கிராம மக்கள் ரெடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பீதி
ஐகோர்ட் செல்ல கிராம மக்கள் ரெடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பீதி
ADDED : ஜன 29, 2025 07:29 AM
விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 9.7 லட்சம் ரூபாயில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
திறப்பு விழா காணாத நிலையில், நீர்வழிப் பாதையில் கட்டடம் கட்டியதாக சக்திவேல் என்பவர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் பேரில், இடித்து அகற்றப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், தங்கள் குழந்தைகளுக்காக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை இடித்து அகற்றிய அதிகாரிகளுக்கு எதிராக ஐகோர்ட்டில் முறையீடு செய்ய தயாராகி வருகின்றனர்.
அதன்படி, நத்தம் புறம்போக்கு என்ற வருவாய்த்துறையின் அனுமதி பெற்று கட்டடம் கட்டப்பட்டது. அதற்குரிய நிதியை விடுவித்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் கமிஷன் பெறுவதில் மட்டுமே குறியாக இருந்தது தெரிகிறது.
பதிவேடுகளை சரிபார்க்காமல் அனுமதி வழங்கிய அதிகாரிகள்; யு.டி.ஆர்., எனப்படும் பதிவேட்டில் நீர்வழிப் பயன்பாடு என இருப்பதாக தெரிய வந்ததால், ஐகோர்ட் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவசர அவசரமக இடித்து அகற்றியது சரியா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த கோப்புகளுடன் ஐகோர்ட்டில் முறையீடு செய்யும்போது அங்கன்வாடி மையத்திற்கு அனுமதி வழங்கியது முதல் நிதியை விடுவித்தது வரை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பலருக்கும் சிக்கல் ஏற்படும் என்பதால், அவர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

