/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சார் பதிவாளர் ஆபீசில் கிராம மக்கள் தர்ணா
/
சார் பதிவாளர் ஆபீசில் கிராம மக்கள் தர்ணா
ADDED : ஜூலை 31, 2025 03:41 AM

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில், வக்பு சொத்து எனக்கூறி பதிவு செய்ய மறுப்பதாகக் கூறி கிராம மக்கள் தர்ணா செய்ததால் பரபரப்பு நிலவியது.
மங்கலம்பேட்டை அடுத்த எம்.அகரம் கிராம மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், இந்து முன்னணி சார்பில் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று காலை 11:00 மணிக்கு திரண்டனர். பின், எம்.அகரம் பெரியசாமி மகன் பூமாலை என்பவரின் வீட்டை, தனது மகன் கார்த்திகேயன் பெயருக்கு தான செட்டில் செய்ய வரும்போது, வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடம் எனக்கூறி பதிவு செய்ய மறுத்து விட்டனர்.
இந்த நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தமில்லை என்பதால் பதிவு செய்து தரக் கோரி, இந்து முன்னணி நிர்வாகி வேல்முருகன் தலைமையில் பா.ஜ., ஒன்றிய தலைவர் பரமசிவம், ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன் தலைமையில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, மாவட்ட பதிவாளர் மகாலட்சுமி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையேற்று, கிராம மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

