/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊதியம் வழங்காததால் கிராம மக்கள் அவதி
/
ஊதியம் வழங்காததால் கிராம மக்கள் அவதி
ADDED : ஜன 03, 2024 06:26 AM
சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றியத்தில் நுாறு நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் அவதியடைந்து வருகின்றனர்.
மங்களூர் ஒன்றியத்தில் 66 ஊராட்சிகள் மற்றும் 30 துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மூலம், ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் தூர் வாருதல், தூய்மை பணிகள், சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. இதில், பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட நிதி மங்களூர் ஒன்றிய ஊராட்சிகளுக்கு வழங்காததால் ரூ. 2 கோடி வரை நிதி நிலுவையில் உள்ளதால், ஊதியம் வழங்க முடியவில்லை என, அதிகாரிகள் கைவிரிக்கின்றனர். இதனால், கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, மங்களூர் ஒன்றிய ஊராட்சிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட நிதியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.