/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனி ஊராட்சியாக அறிவிக்ககோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்
/
தனி ஊராட்சியாக அறிவிக்ககோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்
தனி ஊராட்சியாக அறிவிக்ககோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்
தனி ஊராட்சியாக அறிவிக்ககோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்
ADDED : ஜன 04, 2024 03:59 AM

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த எஸ்.ஏரிப்பாளையத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி, கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி அருகே எஸ்.ஏரிப்பாளையம் கிராம உள்ளது. இதன் ஒரு பகுதி சிறுவத்துார் ஊராட்சியிலும், மற்றொரு பகுதி சேமக்கோட்டை ஊராட்சியிலும் உள்ளது. இதனால் எஸ்.ஏரிப்பாளையம் பகுதிக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என, கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்ககோரி கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்கள் பல பேராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று காலை 9:00 மணிக்கு பண்ருட்டி-மடப்பட்டு சாலையில், பள்ளி மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பண்ருட்டி டி.எஸ்.பி.,சபியுல்லா, தாசில்தார் ஆனந்தி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஷபனா அஞ்சும் ஆகியோர், போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வரும் 8ம் தேதி கலெக்டர் தலைமையில் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதையடுத்து, பகல் 11:30 மணியளவில், உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.