/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சோலைவாழி மாரியம்மன் கோவிலில் விநோத வழிபாடு
/
சோலைவாழி மாரியம்மன் கோவிலில் விநோத வழிபாடு
ADDED : ஜன 01, 2024 12:27 AM

கடலுார் : கடலுார் வெள்ளி மோட்டான் தெரு சோலை வாழி மாரியம்மன் கோவிலில் ஆண்களுக்கு பெண் வேடமிட்டு விநோத வழிபாடு நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வெள்ளி மோட்டான் தெருவில்சோலை வாழி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண் வாரிசு வேண்டும் எனக் வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதும் ஆண் வாரிசுகளுக்கு பெண் வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்தும் விநோத வழிபாடு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடத்துவது வழக்கம்.
இந்தாண்டுபெண் வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்தும் விநோத வழிபாடு நேற்று நடந்தது. பெண் வேடமிட்ட ஆண்கள் ஊர்வலமாக மேள, தாளங்கள் முழங்க கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.பின், நேர்த்திக் கடன் முடிந்ததும் சோலைவாழிமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.