/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெயிலின் தாக்கத்தால் வறண்டு கட்டாந்தரையான வீராணம் ஏரி
/
வெயிலின் தாக்கத்தால் வறண்டு கட்டாந்தரையான வீராணம் ஏரி
வெயிலின் தாக்கத்தால் வறண்டு கட்டாந்தரையான வீராணம் ஏரி
வெயிலின் தாக்கத்தால் வறண்டு கட்டாந்தரையான வீராணம் ஏரி
ADDED : மார் 01, 2024 12:58 AM

சேத்தியாத்தோப்பு:கடலுார் மாவட்டத்தின் காவிரி கடைமடை டெல்டா பகுதியில் 50,000 ஏக்கர் பாசனத்திற்கும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமாகவும் வீராணம் ஏரி உள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், கொள்ளிடம் ஆற்றில் கீழணையில் தேக்கப்பட்டு, அங்கிருந்த வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தடைகிறது. மொத்தம் 1.46 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தேக்கப்படும் தண்ணீர் வாயிலாக டெல்டாவில் 50,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவில் இல்லாததால், வீராணத்திற்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
கடந்த ஜனவரி முதல் வாரத்திலிருந்தே ஏரியில் படிப்படியாக நீர்மட்டம் குறைந்து வந்தது. கடந்த இரண்டு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் முற்றிலும் வறண்டு கட்டாந்தரையாக மாறியுள்ளது. அதனால், சென்னைக்கு குடிநீர் அனுப்புவது செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது.
தற்போது ஏரி வறண்டுள்ள நிலையில், சுற்றுப்புற பகுதி இளைஞர்கள் ஏரியை விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி, கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.

