தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘விஷன்-1500’ துவக்கம் 

பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘விஷன்-1500’ துவக்கம் 

பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘விஷன்-1500’ துவக்கம் 


ADDED : செப் 27, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் ‘விஷன்–1500’ திட்டத்தினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்துார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:

மாவட்டத்தில் 119 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 6,320 மாணவர்களும், 7,521 மாணவிகளும் என மொத்தம் 13,841 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

அரசு பள்ளி மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்க எதுவாக பல்வேறு திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வருகிறது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முன்னெடுப்பாக தற்போது அரசு பள்ளியில் பயின்று வரும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் 1500 நபர்களை தேர்வு செய்து அவர்கள் முன்னணி நிறுவனத்தில் உயர்கல்வி பெறுவதற்கும், பல்வேறு வகையான போட்டித் தேர்விற்கு தயார்படுத்திடும் வகையிலும் ‘விஷன்–1500’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் அனுபவம் மிக்க பயிற்றுனர்களால் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

காலாண்டு விடுமுறை தினங்களாக, செப்., 26ம் தேதி முதல் அக். 4ம் தேதி வரை, 9 தினங்கள், உண்டு உறைவிட பயிற்சியாக புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் 470 மாணவிகளுக்கும், 70 மாணவர்களுக்கும் என மொத்தம் 540 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பின்னர் தொடர்ந்து பள்ளி நாட்களில் இணையதளம் வாயிலாக மாணவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us