/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இந்து மக்கள் கட்சி நிறுவனர் தரிசனம்
/
இந்து மக்கள் கட்சி நிறுவனர் தரிசனம்
ADDED : ஏப் 07, 2025 04:35 AM
பண்ருட்டி : வீரட்டானேஸ்வரர் கோவிலில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் சுவாமி தரிசனம் செய்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் இந்துமக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன்சம்பத் சுவாமி தரிசனம் செய்தார். பின், நிர்வாகிகளுக்கு 60வது பிறந்தநாள் விழா அழைப்பிதழ் வழங்கினர்.
பின் திருவதிகை ஏரிக்கரையில் அமைந்துள்ள அய்யனார் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி மாநில தலைவர் மஞ்சினி, மாவட்ட தலைவர் தேவா, பொது செயலாளர் சக்திவேல், மாவட்ட செயலாளர் கார்த்திக், மாவட்ட இளைஞரணி லட்சுமணன், சிவநாகராஜ், ஆன்மீக பேரவை மாவட்ட செயலாளர் சரவணன், தாமோதரன், ஒன்றிய தலைவர் நித்தியானந்தம், நகர தலைவர் ராஜ்மோகன் உடனிருந்தனர்.

