/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
22ம் தேதி இ.பி.எஸ்., நெய்வேலி வருகை
/
22ம் தேதி இ.பி.எஸ்., நெய்வேலி வருகை
ADDED : பிப் 17, 2024 04:50 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அ.தி.மு.க., அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை செயலர் ரவிச்சந்திரன், மாநில ஜெ., பேரவை துணை செயலர் அருள் அழகன், மண்டல தகவல் தொழில்நுட்ப செயலர் வழக்கறிஞர் அருண், மாவட்ட பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் சந்திரகுமார் வரவேற்றார். மாவட்ட அவை தலைவர் தங்கராசு, மாவட்ட துணை செயலாளர் வளர்மதி ராஜசேகரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் பச்சமுத்து, முனுசாமி, வேல்முருகன், தம்பிதுரை, சின்ன ரகுராமன், மங்கலம்பேட்டை பேரூர் செயலாளர் பாலமுருகன், முன்னாள் சேர்மன் பாஸ்கரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் அரங்க மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரும் 24ம் தேதி ஜெ., பிறந்தநாளில் நலத்திட்ட உதவி வழங்க வேண்டும். கடலுார், சிதம்பரம் லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
வரும் 22ம் தேதி ஜெ., உருவசிலை திறப்பு விழாவிற்கு நெய்வேலி வரும் எதிர்கட்சி தலைவர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.