ADDED : ஜன 14, 2025 07:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; கடலுார் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் விவேகானந்தர் ஜெயந்தி விழா, திருவாடுதுறை ஆதினம் மடத்தின் அருகில் கொண்டாடப்பட்டது.
விஷ்வஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் டாக்டர் ஜெயமுரளிகோபிநாத் தலைமை தாங்கினார்.
பா.ஜ., ராணுவ பிரிவு மாநில பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டசெயலாளர் செந்தில்குமார் பங்கேற்று ஹிந்து தர்மம், கலாசாரம், பண்பாடு பற்றி பேசினர். விழாவில் கள்ளக்குறிச்சி கோபாலன், நடராஜன், முத்துக்குமரன், கார்த்திகேயன், விஷ்வஹிந்து பரிஷத் மாநில பொறுப்பாளர் நாராயணன், பா.ஜ., பாலு விக்னேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பொருளாளர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.