ADDED : மே 24, 2026 05:55 AM

அ நிறம் | அளவு
வடலுார்: வடலுார் அடுத்த வானதிராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட, தென்குத்து உள்ளிட்ட சில பகுதிகளில் என்.எல்.சி., நிர்வாகம் சார்பில் முன்னதாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
அந்த நிலங்களில் தற்போது என்.எல்.சி., நிர்வாகம் சார்பில் பணிகள் தொடங்கியதால் தென்குத்து பகுதியைச் சேர்ந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த, 10 பெண்கள் உட்பட 40 பேர் நேற்று காலை வி.கே.டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வடலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மறிய லில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சமரசம் ஏற்படாததால் அனைவரையும் போலீசார் வேனில் ஏற்றி சென்று, தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். இதனால் நேற்று காலை வி.கே.டி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
