தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வி.கே.டி., சாலை பணிகள் மந்தம்

 வி.கே.டி., சாலை பணிகள் மந்தம்

 வி.கே.டி., சாலை பணிகள் மந்தம்


ADDED : ஜூன் 01, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 06:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடலுார்: வி.கே.டி சாலை பணிகள் மந்தகதியில் நடந்து வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விக்கிரவாண்டி-கும்பகோணம்- தஞ்சாவூர் (வி.கே.டி) சாலை விரிவாக்க பணிகள், பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்த சாலையில் வடலுார் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய ஒப்பந்ததாரர் மூலம் துவக்கி செய்து வந்தனர்.

வடலுார் - கடலுார் சாலையில், ரோட்டு ஆண்டிக்குப்பம் பகுதியில் சாலையின் நடுவே, மேம்பாலம் அமைப்பதற்காக பில்லர் அமைக்கும் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடந்தன. தற்போது அந்த பணிகள் முடங்கி கிடக்கின்றன.

இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது :

வடலுார் புறவழிச்சாலை அமைக்கும் பணிகளில் பல்வேறு காரணங்களால், சற்று தொய்வு ஏற்பட்டது. ஆனால், தற்போது பணிகளை விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால்

திட்டமிட்டதை விட முன்பாகவே பணிகளை முடிக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us