/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி; கடலுாரில் அசைவ ஓட்டலுக்கு சீல் வைப்பு

ADDED : செப் 21, 2024 06:20 AM

கடலுார்: கடலுாரில் கெட்டுப் போன அசைவ உணவுகளை பயன்படுத்திய அசைவ ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கடலுார் தாலுகா அலுவலகம் எதிரில் அசைவ ஓட்டல் உள்ளது. இங்கு கடலுார், செம்மண்டலத்தைச் சேர்ந்த நிஜாம், இவரது மனைவி உட்பட 4 பேர் நேற்று முன்தினம் இரவு ப்ரைடு ரைஸ் சாப்பிட்டனர்.
வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் அவர்களுக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடன், 4 பேரும் கடலுார், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இச்சம்பவம் எதிரொலியாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி கைலாஷ்குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நல்லதம்பி, சந்திரசேகர், சுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட ஓட்டலில் நேற்று அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது, குளிர்சாதனை பெட்டியில் வைத்திருந்த கெட்டு போன 10 கிலோ ப்ரைடு ரைஸ், 5 கிலோ நுாடுல்ஸ், 10 கிலோ சிக்கன் கிரேவி, 3 கிலோ மட்டன் பிரியாணி, 2 கிலோ கத்திரிக்காய் கூட்டு ஆகியவற்றை கண்டுபிடித்து பறிமுதல் செய்து, அழித்தனர். பின், புதுநகர் போலீசார் முன்னிலையில் கடையை பூட்டி சீல் வைத்தனர்.