தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கட்டுமான தொழிலாளர்களிடம் ஓட்டு சேகரிப்பு

 கட்டுமான தொழிலாளர்களிடம் ஓட்டு சேகரிப்பு

 கட்டுமான தொழிலாளர்களிடம் ஓட்டு சேகரிப்பு


ADDED : ஏப் 16, 2026 10:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 10:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் பிரேமலதாவிற்கு ஆதரவாக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நேற்று காலை ஓட்டு சேகரிக்கப்பட்டது. தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார்.

நகராட்சி தலைவர் சங்கவி முருகதாஸ், இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ், நகர தலைவர் செங்குட்டுவன், தே.மு.தி.க., தொகுதி பொறுப்பாளர் வேல்முருகன், நகர செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் ராமு வரவேற்றார்.

அதில், கட்டுமான தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து, முரசு சின்னத்துக்கு ஓட்டு சேகரிக்கப்பட்டது. மேலும், தி.மு.க., ஆட்சியின் சாதனைகள், தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தி.மு.க., பாண்டியன், அன்பழகன், நம்பிராஜன், தே.மு.தி.க., ரமேஷ், ஜானகிராமன், வி.சி., முருகன், மா.கம்யூ., அசோகன், கலைச்செல்வன், ம.தி.மு.க., சவுந்தரராஜன், இந்திய குடியரசு கட்சி மங்காபிள்ளை உட்பட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us