ADDED : மார் 25, 2026 11:04 PM

கடலுார்: கடலுார், நகர அரங்கம் அருகில், சட்டசபை பொது தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
சட்டசபை தொகுதிகளிலும் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையம், கல்லுாரிகள் போன்ற வாக்காளர்கள் அதிகம் உள்ள இடங்களில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றல், கையெழுத்து இயக்கம், சுயபுகைப்பட பதாகை, துண்டு பிரசுரங்கள் வழங்குதல், கிராமிய கலைநிகழ்ச்சிகள் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இன்றைய தினம் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வில்லைகள் ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் மூலம் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டது.
வாக்காளர்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் அச்சுறுத்தலின்றி வாக்களிப்பதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
