ADDED : ஜன 01, 2026 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, கடலுாரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கடலுார் ஆர்.டி.ஓ., சுந்தரராஜன் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். தாசில்தார் மகேஷ் முன்னிலை வகித்தார். வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணி, முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது.
வருவாய்ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

