ADDED : மார் 08, 2026 04:52 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவிலில், 6 வது பட்டாளியன் என்.சி.சி., அண்ணாமலை நகர் பிரிவு சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதில், பருவதராஜ குருகுலம் பள்ளி என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்றனர். காட்டுமன்னார்கோவில், தேர்தல் துணை தாசில்தார் மணிகண்டன், பேரணியை கொடி அசைத்து துவங்கி வைத்து, மாணவர்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பேரணியில், 'நம் வாக்கு - நம் உரிமை' மற்றும் 'வாக்களிப்போம் - நாட்டை வளர்ப்போம்' உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி மாணவர்கள் காட்டுமன்னார்கோவில், உடையார்குடி பகுதி முக்கிய வீதிகளின் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
