ADDED : மார் 28, 2026 06:35 AM

விருத்தாசலம்: சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விருத்தாசலம் நகராட்சி மற்றும் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரி சார்பில், நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கல்லுாரி முன் துவங்கிய பேரணியை, மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா முன்னிலை வகித்தார்.
இதில், நகராட்சி கமிஷனர் நாகராஜ், கல்லுாரி முதல்வர் முனியன், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள், நகராட்சி அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள், வருவாய்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கல்லுாரி முன் துவங்கிய பேரணி, பஸ் நிலையம், பாலக்கரை வழியாக, அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வரை சென்றது. இதில், வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
முன்னதாக, 100 சதவீத ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார்.
