/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் முகாம் : எம்.எல்.ஏ., ஆய்வு
/
வாக்காளர் முகாம் : எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஜன 04, 2026 04:29 AM

சேத்தியாத்தோப்பு: புவனகிரி தொகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி முகாமை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
புவனகிரி தொகுதிக்குப்பட்ட முகந்தரியங்குப்பம், பு.ஆதனுார், மிராளூர், பூதங்குடி, அள்ளூர் உள்ளிட்ட இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி முகாமை அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
அப்போது, வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர் பெயர்களை சேர்க்க வேண்டும் என, அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணை செயலாளர் முருகுமணி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாநில துணை செயலாளர் அருளழகன், அப்துல்கனி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், சீனிவாசன், கருப்பன், பாஸ்கரன், செல்வமணிகண்டன், ராஜ்குமார் உடனிருந்தனர்.

