/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம்... தீவிரம்; பிப். 7ல் திருத்தப்பட்ட பட்டியல் வெளியீடு
/
மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம்... தீவிரம்; பிப். 7ல் திருத்தப்பட்ட பட்டியல் வெளியீடு
மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம்... தீவிரம்; பிப். 7ல் திருத்தப்பட்ட பட்டியல் வெளியீடு
மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம்... தீவிரம்; பிப். 7ல் திருத்தப்பட்ட பட்டியல் வெளியீடு
ADDED : அக் 30, 2025 06:42 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதால் திருத்தம் தேவைப்படுவோர் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலுார் மாவட்டத்தில் 01.01.2026ஐ தகுதி நாளாக கொண்டு 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம், 2026ன் தொடர்பான பணிகள் 28ம் தேதி முதல் மேற் கொள்ளப்படவுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் கடைசியாக 2002 ம் ஆண்டு நடந்த தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளம் http://erolls.tn.gov.in.Rollodf/sir 2002aspx) மற்றும் கடலுார் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.
கணக்கெடுப்பு படிவம் அச்சிடுதல் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பயிற்சி (28ம் தேதி முதல் 3.11.2025 வரை) வீடுவீடாக கணக்கெடுப்பு வழங்கி பூர்த்தி செய்து பெறுதல் (4.11.25ம் தேதி முதல் 4.12.25 வரை) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு (9.12.25), உரிமைக்கோரல் மற்றும் ஆட்சேபணை (9.12.25 முதல் 8.01.2026 வரை) அறிவிப்பு காலம் (விசாரணை மற்றும் சரிபார்ப்பு) (9.12.2025 முதல் 31.01.2026 வரை) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 7.2.2026. வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியான எந்த நபரும் விடுபடவில்ல என்பதை உறுதி செய்ய வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் கணக்கெடுப்பு படிவம் 4.11.25ம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு, வாக்காளர்களால் கையெப்ப்பமிடப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தை வாக்காளர்களிடமிருந்து திரும்பப்பெறப்பட உள்ளது.
முகவரியில் இல்லாத, இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் அடையாளம் காணப்பட்டு, தலைமைத் தேர்தல் அலுவலர் இணையதளம் மற்றும் அரசு பொதுத்துறை அலுவலகங்களில் ஒட்டப்படும்.
முந்தைய சிறப்பு தீவிர திருத்தம் 2002ல் ஒப்பிட்டு பொருந்தாத வாக்காளர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்களால் அறிவிப்பு வெளியிடப்படும்.
வீடு வீடாக வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தினை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு பணியின்போது புதிய வாக்காளர்களை சேர்க்க படிவம் 6 மற்றும் அறிக்கை படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் பெறப்படவுள்ளது.
மேற்படி கணக்கெடுப்பு படிவத்தினை பூர்த்தி செய்வதில் வாக்குச்சாவடி நிலை முகவர்களும் வாக்காளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கணக்கெடுப்பு படிவம் பெறப்பட்ட அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் வரைவு வாக்காளர்களின் பட்டியலில் இடம் பெறும்.

