/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி அரசியல் கட்சி நிர்வாகிகள் 'ஷாக்'
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி அரசியல் கட்சி நிர்வாகிகள் 'ஷாக்'
வாக்காளர் பட்டியல் திருத்த பணி அரசியல் கட்சி நிர்வாகிகள் 'ஷாக்'
வாக்காளர் பட்டியல் திருத்த பணி அரசியல் கட்சி நிர்வாகிகள் 'ஷாக்'
ADDED : நவ 19, 2025 07:06 AM
தமிழகத்தில் வரும் 2026ம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது.
கடலுார் மாவட்டத்தில், கடலுார், பண்ருட்டி, குறிஞ் சி ப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் (தனி) திட்டக்குடி (தனி), சிதம்பரம், புவனகிரி என, 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதி வாரியாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று, விண்ணப்பம் வழங்கி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் மூலமாக இறந் தோர், வெளியூரில் வசிப்போர், முகவரி மாறி சென்றோரின் விவரங்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளது.
இவ்வாறு செய்வதன் மூலமாக ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் ஓட்டளிக்க தகுதியுடையோர்களின் பெயர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறும்.இவர்களுக்கு மட்டுமே தேர்தலின் போது, அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்யும் வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக கடந்த காலங்களில், நடந்த தேர்தல்களில் கட்சித் தலைமை வழங்கிய பணத்தை உண்மையான வாக்காளர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு தராமல் ஏமாற்றி நிர்வாகிகள் கணிசமாக சம்பாதித்தனர்.ஆனால், தற்போது, அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு மட்டுமே தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்யும் வாய்ப்பு இருப்பதுடன், கட்சித் தலைமையை ஏமாற்றி சம்பாதித்துக் கொண்டிருந்த பணம் கிடைக்காது என்பதால், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கவலை அடைந்துள்ளனர்.
-நமது நிருபர்-

