தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இட நெருக்கடியால் வாக்காளர்கள் அவதி 

 இட நெருக்கடியால் வாக்காளர்கள் அவதி 

 இட நெருக்கடியால் வாக்காளர்கள் அவதி 


ADDED : ஏப் 23, 2026 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 11:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் 7 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் இரண்டு ஓட்டுச்சாவடிகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும்,மற்ற 5 ஓட்டுச்சாவடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் இருந்தன. இந்த 5 ஓட்டுச்சாவடிகளில் மொத்தம் 5174 வாக்காளர்கள் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பள்ளி கட்டத்தில் பக்கத்து, பக்கத்து அறைகளில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டதால், வாக்காளர்கள் இட நெருக்கடியில் அவதியடைந்தனர்.

பாகம், 7 ல் இடையர்குப்பம், கொட்டிக்கோணாங்குப்பம்,புதுக்குப்பம்,பட்டீஸ்வரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 1052 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பாகம் எண் 7 உள்ள பகுதியிலேயே அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. அதேபோல் பாகம் 5,பாகம் 6 ல் 2200 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

பாகம் 5,6,7 பாகத்திற்கான ஓட்டுச்சாவடிகள் அதே பகுதியில் அமைக்காமல், 2 கி.மீ., துாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுச்சாவடிகள் அமைத்தனர். இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us